விசா காலம் முடிவதற்குள்., வெளிநாட்டவர் பதிவு விதிகளில் மாற்றம்
இந்திய உள்துறை அமைச்சகம் 2025 குடியேற்ற மற்றும் வெளிநாட்டவர் விதிகளில் திருத்தங்களை அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, 180 நாட்கள் அல்லது அதற்கு குறைவான விசா பெற்றுள்ள வெளிநாட்டவர்கள், அந்த காலம் முடிவதற்கு முன்பே பதிவு செய்ய வேண்டும்.
முன்பு, 180 நாட்கள் முடிந்த பின் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய அனுமதி இருந்தது. இப்போது, விசா காலம் முடிவதற்கு முன்பே பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
இது வெளிநாட்டவர்களை கண்காணிக்கவும், குடியேற்ற மேலாண்மையை வலுப்படுத்தவும் உதவும்.

அதேபோல், 180 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் விசா பெற்றவர்களும், 180 நாட்களை மீறினால், அந்த காலம் முடிவதற்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். விசா நீட்டிப்பு அனுமதி அவசர சூழ்நிலைகளில் மட்டுமே வழங்கப்படும்.
குழந்தைகள் பிறப்பு அறிவிப்பில் தளர்வு
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால், கட்டாயமாக 30 நாட்களுக்குள் பிறப்பு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், குழந்தை பின்னர் வெளிநாட்டு குடியுரிமை பெறும் போது, 30 நாட்களுக்குள் பதிவு அதிகாரியிடம் தகவல் அளிக்க வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |