புறப்பட்ட 10 நிமிடங்களில் அழிந்த அமேசான் நிறுவன 40 செயற்கைகோள்கள்
amazon loses 40 satelites as ula valcon rocket fails: அமேசான் நிறுவனத்தின் 40 செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிடங்களில் தொலைவியடைந்து கீழே விழுந்துள்ளது.
அமேசான் செயற்கைகோள் ஏவுதல் தோல்வி
போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்களுக்கு கூட்டாகச் சொந்தமான UAL ராக்கெட் நிறுவனம், கேப் கனாவெரலில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 12:40 மணிக்கு வல்கண் ரொக்கெட்டை விண்ணில் ஏவியது.

அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான 40 செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட இந்த ரொக்கெட், புறப்பட்ட 10 நிமிடங்களில் கோளாறு காரணமாக ரொக்கெட் கீழே விழுந்துள்ளது.
தோல்வியடைந்த இந்தத் திட்டம், அமேசான் நிறுவனம் ஒரே ஏவுதலில் ஏவ முயன்ற செயற்கைக்கோள்களின் மிகப்பெரிய தொகுப்பாகும்.
ஏப்ரல் 2025 முதல் சுமார் 400 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ள அமேசான், ஜூலை மாதத்திலிருந்து எந்த ஏவுதலையும் நடத்தவில்லை.
அமேசான் தனது வணிக இணையச் சேவையான அமேசான் லியோவை 2026 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இந்தசெயற்கைகோள் கூட்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள UAL, "எங்கள் ஏவுதல் இயக்குநருக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், விண்வெளி ஏவுதள வளாகம் 41-இலிருந்து ஏவப்பட்ட வல்கன் விண்கலம், பயணம் தொடங்கிய 10 நிமிடங்களில் ஒரு கோளாறைச் சந்தித்தது என்பதையும், அதன் காரணமாக அமேசான் திட்டத்தை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தத் தவறிவிட்டது என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு பயணமும் தரவுகளை உருவாக்குகிறது, மேலும் ஒவ்வொரு பயணமும் நமக்கு ஒன்றைக் கற்றுத் தருகிறது. இந்தக் கோளாறு சற்றுமுன்தான் நிகழ்ந்ததால், இன்று என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள எங்களிடம் இன்னும் குறிப்பிட்ட தரவுகள் எதுவும் இல்லை" என குறிப்பிட்டுள்ளது.
There is risk with any launch, and that’s especially true for inaugural missions like LV-01. ULA has been a trusted partner for Amazon, and we believe they’ll learn from this mission and deliver on their long-term plans for Vulcan. Full statement from @ulalaunch below.
— Amazon Leo (@AmazonLeo) November 15, 2026
அமேசான் லியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவொரு ஏவுதலிலும் ஆபத்து உள்ளது, குறிப்பாக LV-01 போன்ற தொடக்ககாலப் பயணங்களுக்கு இது மிகவும் பொருந்தும். ULA, அமேசானின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருந்து வருகிறது.
மேலும் அவர்கள் இந்தப் பயணத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வல்கனுக்கான தங்களின் நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளது.
இதைக் கேட்பதற்கு வருத்தமாக உள்ளது. நீங்கள் விரைவில் மீண்டும் விமானப் பணிக்குத் திரும்புவீர்கள் என நம்புகிறேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளின் சாத்தியத்தை நிரூபிப்பதற்காக, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்ஷிப் மெகா-ராக்கெட்டின் சோதனைப் பயணத்தின்போது 26 பெரிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு விண்கலத்தை பிடித்த நிகழ்வுக்கு அடுத்த நாள் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.