Amazon -ல் நடக்கும் முறைகேடு: ரகசிய அல்காரிதம் "Project Nessie" மூலம் 1 பில்லியன் டொலர் லாபம்
அமேசான் நிறுவனம் ரகசிய அல்காரிதம் "Project Nessie" மூலம் சட்டத்திற்கு புறம்பாக 1 பில்லியன் டொலர் லாபம் ஈட்டியதாக கூட்டாட்சி வர்த்தக ஆணையம் புகார் அளித்துள்ளது.
அமேசானில் சட்டத்திற்கு புறம்பாக வருமானம்
ஒன்லைன் வணிக தளமான அமேசான் நிறுவனம், விலையை உயர்த்தி சட்டவிரோதமாக லாபத்தை ஈட்டுவதாக கூட்டாட்சி வர்த்தக ஆணையம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.
இந்த புகாரில், "அமேசான் நிறுவனம் "Project Nessie" என்ற திட்டத்தின் மூலமாக விலையை உயர்த்தி 1 பில்லியன் டொலரை சட்டத்திற்கு புறம்பாக எட்டி உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "Project Nessie" என்ற திட்டத்தின் மூலமாக அமேசானில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு, பொருள்களின் விலையை உயர்த்தியது எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கடைக்காரர்கள் செலுத்தும் விலையை உயர்த்தும் நோக்கத்தில் "Project Nessie" மூலம் அமெரிக்க குடும்பங்களில் இருந்து ஒரு பில்லியன் டொலரை ஏற்கனவே பிரித்து எடுத்துள்ளது.
இந்த ரகசியமான அல்காரிதம் மூலம் தயாரிப்பு பொருள்களின் விலையை உயர்த்துகிறது. இதே போல, மற்ற கடைகளும் விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த "Project Nessie" என்ற திட்டத்தை அமேசான் இடைநிறுத்தியுள்ளது. எப்போது வேண்டுமானாலும், அதனை இயக்க அமேசான் பரிசீலித்து வருவதாக கூட்டாட்சி வர்த்தக ஆணையம் புகாரில் தெரிவித்துள்ளது.
அமேசான் அளித்த விளக்கம்
இது தொடர்பாக அமேசான் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "Project Nessie" என்ற திட்டம் மூலம் பழைய பொருள்களின் விலைகளும் உயர்வதாக கூட்டாட்சி வர்த்தக ஆணையம் சொல்வதை ஏற்க முடியாது. இதன் மூலம் பொருள்களின் விலை குறையும்" என்று கூறியுள்ளது.