அமேசான் நிறுவனம் அதிரடி முடிவு... வேலை இழக்கும் 30,000 கார்ப்பரேட் ஊழியர்கள்
செவ்வாய்க்கிழமை தொடங்கி 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை நீக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கிட்டத்தட்ட 10 சதவீதம்
இந்த வேலை நீக்க எண்ணிக்கை அமேசான் நிறுவனத்தின் மொத்த 1.55 மில்லியன் ஊழியர்களில் ஒரு சிறிய சதவீதமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நிறுவனத்தின் தோராயமாக 350,000 கார்ப்பரேட் ஊழியர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர்கள் வேலையை இழக்க உள்ளனர்.

மட்டுமின்றி, 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி சுமார் 27,000 ஊழியர்கள் நீக்கப்பட்டதிலிருந்து அமேசானில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய வேலைக் குறைப்பு இதுவாகும்.
அமேசான் நிறுவனமானது கடந்த இரண்டு ஆண்டுகளில் தகவல் தொடர்பு, பாட்காஸ்டிங் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறிய எண்ணிக்கையிலான வேலைகளைக் குறைத்து வருகிறது.
இந்த வாரம் தொடங்கும் வேலை குறைப்பு என்பது அமேசானுக்குள் பல்வேறு பிரிவுகளை பாதிக்கலாம், இதில் மக்கள் அனுபவம் மற்றும் தொழில்நுட்பம் எனப்படும் மனித வளங்கள், சேவைகள் மற்றும் செயல்பாடுகள் போன்றவை அடங்கும்.
வேலை இழப்பு
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, நிறுவனத்தில் அதிகப்படியான அதிகாரத்துவத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகிறார், இதில் மேலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு அதிகரிப்பதால், குறிப்பாக மீண்டும் மீண்டும் செய்யப்படும் மற்றும் வழக்கமான பணிகளை தானியக்கமாக்குவதன் மூலம், மேலும் வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று ஜூன் மாதத்தில் ஜாஸ்ஸி கூறியிருந்தார்.

இந்த வருடம் மட்டும் உலகமெங்கும் 216 நிறுவனங்கள் தொராயமாக 98,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. 2024ல் இந்த எண்ணிக்கை 153,000 என இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |