இந்தியாவின் Top 10 பணக்காரர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார்?
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியல் குறித்து வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டின் சூன் மாதத்தின் முதல் 10 இந்திய பணக்காரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதல் இடமும், கௌதம் அதானி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.
1.முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் நிறுவனம், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் முகேஷ் அம்பானி கோலோச்சி வருகிறார்.
அவரது புதுமையான அணுகுமுறையால் வேகமாக முன்னேறி வரும் ரிலையன்ஸ், முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
இதன்மூலம் 115.8 பில்லியன் டொலர் மதிப்புடன் இந்தியாவின் முதல் பணக்காரராக மாறியுள்ளார் முகேஷ் அம்பானி.
2.கௌதம் அதானி
86.2 பில்லியன் டொலர்களுடன் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
இவர் துறைமுகங்கள், தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தனது பல்வேறு முயற்சிகள் மூலம் தனது வணிகத்தை மறுவடிவமைத்துள்ளார்.
3.சாவித்ரி ஜிண்டால்
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பம் 39.8 பில்லியன் டொலர்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
எஃகு தொழிலில் ஜிண்டால் குடும்பம் முன்னிலை வகித்து வருகிறது. சாவித்ரி ஜிண்டாலின் தலைமையில் JSW நிறுவனம் பாரிய சாதனைகளை படைத்து வருகிறது.
4.ஷிவ் நாடார்
HCL டெக்னலாஜிஸின் இணை நிறுவனராக உள்ள தமிழர் ஷிவ் நாடார். இவர் 32.5 பில்லியன் டொலர் மதிப்புடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இவர், தனது நிறுவனத்தை அசுர வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளார்.
5.திலீப் ஷங்வி
சன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் தலைவரான திலீப் ஷங்வி 24.9 பில்லியன் டொலர் மதிப்புடன் 5வது இடத்தில் உள்ளார்.
இவரின் மூலோபாய கையகப்படுத்துதல் மற்றும் புதுமையான மருந்து மேம்பாடு ஆகியவற்றின் மூலம் உலகளாவிய மருந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
6.குமார் பிர்லா
சிமெண்ட், உலோகங்கள் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் குமார் பிர்லா, 22.9 பில்லியன் டொலர் மதிப்புடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.
7.சைரஸ் பூனவல்லா
Serum Institute of India தடுப்பூசி தயாரிப்பு மூலம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் முக்கிய பங்களிக்கிறது.
இதன்மூலம் இதன் நிறுவனர் சைரஸ் பூனவல்லா 7வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது மதிப்பு 21.8 பில்லியன் டொலர் ஆகும்.
8.ராதாகிஷன் தமானி
Dmart நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமானி சில்லறை விற்பனைத் துறையில் புரட்சி ஏற்படுத்தியவர். தமது சலுகைகள் மற்றும் திறமையான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு, சில்லறை வணிகச் சங்கிலியை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.
9.குஷால் பால் சிங்
இவர் 19.6 பில்லியன் டொலர் மதிப்புடன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். தனது DLF லிமிடெட் நிறுவனர் குஷால் பால் சிங் ஒரு ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தை வடிவமைத்துள்ளார்.
10.ரவி ஜெய்ப்புரியா
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளவர் ரவி ஜெய்ப்பிரியா. Varun Beverages Ltd மூலம் ரவி ஜெய்ப்புரியா குளிர்பான துறையில் கணிசமான முத்திரையைப் பதித்துள்ளார்.
18.4 பில்லியன் டொலர் மதிப்புடன் உள்ள இவர், தமது நிறுவனத்தை பாரிய அளவில் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசென்றுள்ளார் மற்றும் சந்தை இருப்பை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |