அன்டிலியா வீட்டை காலி செய்ய அம்பானிக்கு புதிய சிக்கல்
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அவரது குடும்பத்தினருடன் மும்பை பரேட் சாலை பகுதியில் உள்ள அன்டிலியா என்னும் ஆடம்பர இல்லத்தில் குடியிருந்து வருகிறார்.
அன்டிலியா
4.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த வீடானது, 27 தளங்களை கொண்டுள்ளது. 8.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வந்தால் கூட தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அன்டிலியா, இந்தியாவின் ஆடம்பர வீடுகளில் ஒன்றாகும்.
சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டம் மூலம் அன்டிலியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வக்ஃபு வாரிய நிலத்தில் அன்டிலியா
அன்டிலியா கட்டப்பட்டுள்ள நிலத்தின் முந்தைய உரிமையாளரான கரீம் பாய் இப்ராஹிம், மதக் கல்வி மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்காக 1895 ஆம் ஆண்டு வக்ஃபு வாரியத்திற்கு நிலத்தை வழங்கினார்.

ரூ 15,000 கோடியில் உருவான Antilia மாளிகை... ஒரே ஒரு காரணம் 27வது மாடியில் வசிக்கும் முகேஷ் - நீதா தம்பதி
அன்டிலியா கட்டப்படுவதற்கு முன், 2002 ஆம் ஆண்டு அந்த நிலத்தை வக்ஃபு வாரியத்திடமிருந்து, சுமார் ரூ.21 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.
அப்பொழுதே இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தற்போது வக்ஃபு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அம்பானிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வீட்டை காலி செய்ய நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |