லூடோ விளையாட்டு நிறுவனம்... முகேஷ் அம்பானியுடன் கூட்டு... இன்று ரூ 5,000 கோடி மதிப்பு
இணையமூடாக லூடோ விளையாட்டை அறிமுகம் செய்துள்ள Zupee நிறுவனம், தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் ரூ 5000 கோடி சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
அம்பானியுடன் கூட்டணி
இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ள நிறுவனங்களில் ஒன்று Zupee. இணையமூடாக லூடோ விளையாட்டை அறிமுகம் செய்துள்ள இந்த நிறுவனம் மிக வெற்றிகரமாக 120 மில்லியன் டொலர் முதலீடை ஈர்த்துள்ளது.
அத்துடன் முகேஷ் அம்பானியுடன் கூட்டணி ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் Dilsher Malhi.கான்பூர் ஐஐடியில் இரசாயன பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
இதனையடுத்து சுவிட்சர்லாந்தில் EPFL நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 2018ல், சித்தாந்த் சவுரப் என்பவருடன் இணைந்து கேமிங் தளமான ஜூபியை நிறுவினார். வெறும் 27 வயதில், 2023ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த 200 சுயமாகத் தொழில் முனைவோர் பட்டியலில் தில்ஷர் அங்கீகரிக்கப்பட்டார்.
600 மில்லியன் டொலர்
2022ல் 102 மில்லியன் டொலர், இந்திய மதிப்பில் ரூ 760 கோடி முதலீட்டை ஈர்த்த நிலையில், ஜூபி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது.
இந்த நிலையில் ஆகாஷ் அம்பானியின் கீழ் செயல்படும் ஜியோ தளங்களுடன் ஜூபி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் பங்கு விற்பனை எதுவும் முன்னெடுக்காமல், வருவாயில் பங்கு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முகேஷ் அம்பானி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தார் தில்ஷர்.
தற்போது ஜூப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 5000 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |