முகேஷ் அம்பானிக்கு அதிக லாபம் ஈட்டித் தந்த தொழில்... இந்த நிறுவனம் அதிக பங்களிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனங்களை வழிநடத்தும் முகேஷ் அம்பானி, 2025–26 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான (Q1 FY26) நிதி முடிவுகளை அறிவித்துள்ளார்.
ஜியோ
இந்நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.58,024 கோடி EBITDA-வையும், ரூ.30,783 கோடி வலுவான நிகர லாபத்தையும் பதிவு செய்துள்ளது.
பொதுவாக எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்திற்கு பெயர் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய முடிவுகள் அதன் வணிக மாதிரியில் ஒரு மாற்றத்தைக் குறிக்கின்றன.
அந்த நிறுவனம் தற்போது அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவை விட அதன் தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் சில்லறை வணிக முன்னெடுப்புகளிலிருந்து அதிக பணம் சம்பாதித்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, அதன் வருவாய்க்கு அதிக பங்களிப்பை அளித்து வருகிறது.
ஜியோ ரூ.18,312 கோடி EBITDA-வை பதிவு செய்துள்ளது, இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 32 சதவீதமாகும். ஜியோ 200 மில்லியன் 5G பயனர்களையும் தாண்டியுள்ளது, தற்போது 20 மில்லியன் வீட்டு பிராட்பேண்ட் பயனர்களைக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல்
அதன் சராசரி ஒரு பயனருக்கான வருவாய் (ARPU) ரூ.208.8 ஆக உயர்ந்துள்ளது - இது கடந்த ஆண்டை விட 14.9% அதிகமாகும். ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிறுவனமும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, EBITDA ரூ.6,381 கோடியாக பதிவாகியுள்ளது - இது கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 12.7% அதிகமாகும்.
சில்லறை விற்பனைப் பிரிவு ரூ.84,171 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. மட்டுமின்றி இந்தியா முழுவதும் 388 புதிய கடைகளைத் திறந்துள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கை 358 மில்லியனாக வளர்ந்துள்ளது, இது ரிலையன்ஸ் ரீடெய்ல் மீதான வலுவான நுகர்வோர் ஆர்வத்தைக் காட்டுகிறது.
புதிய யுக வணிகங்கள் செழித்து வரும் அதே வேளையில், ரிலையன்ஸின் பாரம்பரிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பலவீனமான வருவாய் தொகைகளைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4.1 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. EBITDA ரூ.4,996 கோடியாக பதிவாகியுள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம் KG-D6 எரிவாயு வயலில் இருந்து உற்பத்தி குறைந்தது மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன் எரிவாயு விலைகள் சரிந்ததே ஆகும்.
ஒட்டுமொத்தமாக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் 1.2 சதவீத சரிவை முகேஷ் அம்பானி எதிர்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |