முகேஷ் அம்பானியின் Jio IPO... முதல் சில மணி நேரத்திலேயே படைக்கப்பட்ட சாதனை
Jio IPO fully subscribed within hours: ஜியோவின் சாதனை ஐபிஓ, சில மணி நேரங்களிலேயே முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ, புதன்கிழமை அன்று பொது ஏலம் தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது.
முதல் பங்கு விற்பனை
இந்தியாவின் மிகப்பெரிய பங்கு விற்பனையான இது, கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து இருபது ஆண்டுகளில் நடைபெறும் முதல் பங்கு விற்பனையாகும்.

இதனாலையே முதலீட்டாளர்கள் மிக ஆர்வத்துடன் போட்டி போட்டு கொண்டு ஜியோ பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்துள்ளனர். மெட்டா, ஆல்ஃபபெட்டின் கூகுள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் ஆதரவுடன், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் 500 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது.
இதன் மூலம், சைனா மொபைலுக்குப் பிறகு ஒரே நாட்டில் செயல்படும் உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் இது விளங்குகிறது.
மட்டுமின்றி, முதலீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிறுவனங்கள் மீதான தங்கள் ஆய்வைத் தீவிரப்படுத்தியுள்ள இக்காலகட்டத்தில், புதிய பங்கு வெளியீடுகளுக்கான உலகளாவிய ஆர்வத்தை சோதிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஐபிஓ அமைந்துள்ளது.
ஜியோவின் வருவாயில் 90 சதவீதத்திற்கும் மேல் தொலைத்தொடர்பு வணிகத்திலிருந்து வருகிறது. இந்தியாவில் பெரிய IPO-க்கள் பொதுவாக மந்தமாகவே தொடங்கும் நிலையிலும், நிறுவனங்கள் பெரும்பாலும் இறுதி நேரம் வரை ஏலம் கேட்கக் காத்திருக்கும் நிலையிலும், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகமாகவே காணப்படுகிறது.
மற்ற பெரிய ஐபிஓக்களில், சமீபத்தில் நடைபெற்ற இந்திய தேசிய பங்குச் சந்தையின் பங்கு விற்பனை அதன் முதல் நாளில் 42 சதவீதம் மட்டுமே சந்தா செய்யப்பட்டது, மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் பங்கு விற்பனை 18 சதவீதம் மட்டுமே சந்தா செய்யப்பட்டது.
இந்த நிலையில், விண்ணப்பம் தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே முழுமையான சந்தாதாரரை பெற்ற (fully subscribed) ஐபிஓ என்ற பெருமையை ஜியோ ஐபிஓ பெற்றுள்ளது.
மாபெரும் சாதனை
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் இந்த பிரம்மாண்ட ஐபிஓ விண்ணப்பம் இன்று காலை தொடங்கப்பட்டது. வெறும் 35 முதல் 100 நிமிடங்களுக்குள்ளாகவே முழுமையாக suscribersகளை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

ஜியோ IPO-வின் மதிப்பு தோராயமாக 30,213 கோடி ரூபாய். இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய பப்ளிக் ஆஃபரிங் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது. தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் என அனைவரும் போட்டி போட்டு கொண்டு ஜியோ பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.
இந்த ஐபிஓ மூலம் புதிதாக 27 கோடி பங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 27 கோடி பங்குகளை வாங்க முதல் ஒரு மணி நேரத்திலேயே விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சில்லறை முதலீட்டாளர்களுக்கு முன்பாகவே, ஏகப்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் 212 ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு சுமார் 8,110 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த ஆங்கர் ஒதுக்கீட்டிற்காகவே முதலீட்டாளர்களிடமிருந்து 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான அதாவது சுமார் 30 மடங்குக்கும் மேல் விண்ணப்பம் வந்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்களும் வேகமாக இதற்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
ஜியோ ஐபிஓ-வில் ஒரு பங்கை வாங்குவதற்கான விலை 1,065 முதல் 1,119 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 பங்குகள் கொண்டது ஒரு லாட். சில்லறை முதலீட்டாளர்கஉக்கு ஒரு லாட் (12 பங்குகள்) வாங்க குறைந்தபட்சம் 13,428 ரூபாய் தேவைப்படும்.
தகுதியான நிறுவன ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு 54 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அக்டோபர் 23 வரை விண்ணப்பம் செய்யலாம். அக்டோபர் 26 அன்று பங்குகள் ஒதுக்கப்பட்டு டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். அக்டோபர் 28ஆம் திகதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.