உக்ரைனுக்கு துரோகம் இழைத்த எலான் மஸ்க்... ட்ரம்புடன் ஆலோசனை: வெளிவரும் புதிய தகவல்
Musk ordered slowdown of Starlink service: ஸ்டார்லிங்க் சேவையின் வேகத்தைக் குறைக்க மஸ்க் உத்தரவிட்டார்.
உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவத் தரத்திலான ஸ்டார்லிங்க் சேவையின் வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க் உத்தரவிட்டதாகவே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
மஸ்க் ட்ரம்புடன்
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமெரிக்க அதிகாரிகள் மற்றும், தகவல் தெரிந்த நபர்கள் ஆகியோர் பகிர்ந்துள்ள தரவுகளின் அடிப்படையில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதை உறுதி செய்துள்ளது.

உக்ரைன், போர்க்களத் தகவல் தொடர்பு மற்றும் ட்ரோன் செயல்பாடுகளுக்காக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையைப் பயன்படுத்தி வருகிறது.
இந்தச் செயற்கைக்கோள் சேவையைக் கட்டுப்படுத்தியதால், ரஷ்யாவிற்கு எதிரான அந்நாட்டின் தாக்குதல் மற்றும் வான் பாதுகாப்பு ட்ரோன் பணிகள் தடைபட்டன. இதனால் உக்ரைன் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஸ்டார்லிங்க் (Starlink) சேவையின் வேகம் குறைக்கப்பட்ட விவகாரம் அம்பலமானதைத் தொடர்ந்து, கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அவரும் மஸ்க்கும் இது குறித்து தொலைபேசி வாயிலாகப் பேசிக்கொண்டனர்.
மேலும், ஸ்டார்லிங்க் சேவையின் வேகத்தைக் குறைப்பதற்கான முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பே, இருவரும் இது குறித்து விவாதித்திருந்தனர் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிடுகிறது.

ஆனால், உக்ரைன் இராணுவம் ஸ்டார்லிங்க் சேவையை இழந்ததற்கு தானோ அல்லது மஸ்க் காரணமோ இல்லை என்று கடந்த வாரம் ட்ரம்ப் கூறியிருந்தார், அதே நேரத்தில் வேகம் அல்லது ஸ்டார்ஷிப் பயன்பாடு குறித்த வரம்புகள் அமெரிக்க இராணுவம் அல்லது ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படுவதாக மஸ்க் விளக்கமளித்திருந்தார்.
ஸ்டார்லிங்க் சேவை முடக்கம் தொடர்பில் வெள்ளை மாளிகையில் இருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து அக்டோபர் 17 ஆம் திகதி தகவல் கசிந்தது.
துரோகம்
மேலும், உக்ரேனிய இராணுவத்திற்கான ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷீல்டு சேவையின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற தகவல் பாதுகாப்புத் துறைத் தலைவர்களுக்குக் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தேர்தல் நெருக்கடியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய டீசலை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்ததோடு, ரஷ்யா மீதான புதிய தடைகளைத் தளர்த்தியும் உள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிக மோசமான நிலையை எட்டியது.
மேலும், ஸ்டார்லிங்க் விவாதத்தின் நடுவே, ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனிடம் ட்ரம்ப் கூறியதுடன், ஜெலென்ஸ்கிக்குப் பதிலாக வேறொருவரை ஜனாதிபதியாக நியமிக்குமாறு உக்ரேனியர்களையும் வலியுறுத்தினார்.

ஸ்டார்லிங்க் சேவையை முடக்குவதனூடாக ரஷ்யாவிற்கு எதிரான ட்ரோன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மஸ்க் முயன்றுள்ளார். இது உக்ரேனிய மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றே ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஓஸ்லோவில் இருக்கும் ஜெலென்ஸ்கி, அமெரிக்க உறவுகளைச் சீரமைக்கும் முயற்சியுடன், மீட்டெடுக்கப்பட வேண்டிய ஸ்டார்லிங்க்/ஸ்டார்ஷீல்டு திட்டத்தின் நிலைமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் விவாதித்ததாக செவ்வாயன்று தெரிவித்தார்.
இதனிடையே, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் செவ்வாய்க்கிழமை அன்று கூறுகையில், உக்ரைன் ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா பறிக்கவில்லை என்றும், மாறாக, உக்ரைன் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய சேவை விதிமுறைகளில்தான் சிக்கல் உள்ளது என்றும் தெரிவித்தார்.