வெறும் 5 நாட்களில் முகேஷ் அம்பானி இழந்த பல ஆயிரம் கோடிகள்... ரிலையன்ஸ்க்கு மிகப்பெரிய பின்னடைவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, கடந்த வாரம் அவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மிகப்பெரிய பின்னடைவாக
கடந்த வாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் மொத்தமாக ரூ 74,563.37 கோடியை இழந்துள்ளது. இது அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் பங்குகளின் விலை ரூ 1280 என சரிந்துள்ளது. நவம்பர் 4 முதல் 8ம் திகதி வரையில் சுமார் 2 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. வெறும் 5 நாட்களில் ரூ 74,000 கோடியை இழந்தாலும், இந்தியா மற்றும் ஆசியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக தற்போதும் உள்ளார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு 100.7 பில்லியன் டொலர்கள் அல்லது இந்திய மதிப்பில் ரூ 849,738 கோடி என்றே தகவல் வெளியாகியுள்ளது. பிஎஸ்இ பெஞ்ச்மார்க் கடந்த வாரம் 237.8 புள்ளிகள் அல்லது 0.29 சதவீதம் சரிவடைந்தது.
இதனால், ரிலையன்ஸ் நிறுவனம், Bharti Airtel, ICICI Bank, ITC, Hindustan Unilever மற்றும் LIC ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. ஆனால், TCS, HDFC Bank, Infosys உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |