அம்பானி வீட்டு திருமணம்.., விருந்தினர் கையில் பேண்ட் கட்டியதற்கு காரணம் என்ன?
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களின் கையில் கலர் கலராக பேண்ட் கட்டப்பட்டிருந்தது.
பிராம்மாண்ட திருமணம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை வந்தனர்.
தமிழ் பிரபலங்களான ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பம், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, அட்லீ மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதோடு, கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்துக்காக ரூ.5,000 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய விருந்தினர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது.
கையில் பேண்ட்
ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த அனைத்து பிரபலங்களின் கையிலும் கலர் கலராக பேண்ட் கட்டப்பட்டிருந்தது. முக்கியாக நீலம் மற்றும் பிங்க் நிறத்தில் கட்டப்பட்டது.
அதாவது, திருமணத்தில் பங்கேற்பவர்கள் எந்த பகுதியில் அமர வேண்டும் என்பதை குறிப்பதற்காக பேண்ட் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |