இந்திய அரசின் ஒற்றை அறிவிப்பு... ரூ 82,000 கோடியை இழந்த முகேஷ் அம்பானி
டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான திடீர் வரி (windfall tax) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதால், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவீதத்திற்கு மேல் சரிந்து.
உள்நாட்டு நுகர்வுக்கு
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.82,000 கோடிக்கும் அதிகமாகக் குறைந்தது. உலகளாவிய எண்ணெய் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், எரிசக்தித் துறை வருவாயை சீரமைக்க இந்திய அரசாங்கம் முற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இதற்காக, டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வருவாய் திரட்டும் ஒரு முயற்சியாகும்.
இந்த நிலையில் டீசல் ஏற்றுமதிக்கு லிற்றருக்கு ரூ.21.5 மற்றும் ஏ.டி.எஃப் ஏற்றுமதிக்கு லிற்றருக்கு ரூ.29.5 என விதிக்கப்படும் புதிய வரிகள், உள்நாட்டு நுகர்வுக்கு இந்த எரிபொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதனுடன், உள்நாட்டு நுகர்வுக்கான பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிற்றருக்கு ரூ.3 ஆக குறைக்கப்பட்டது. டீசல் மீதான அத்தகைய வரி முற்றிலுமாக நீக்கப்பட்டது.
இது உள்நாட்டு நுகர்வோருக்கு சாதகமான ஒரு மாற்றமாகும். அரசின் இந்த வரிவிதிப்பு நடவடிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை வணிகரான நயாரா எனர்ஜி, பெட்ரோல் விலையை லிற்றருக்கு ரூ.5, டீசல் விலையை ரூ.3 உயர்த்தியிருந்தது.
ரஷ்யாவின் ரோஸ்னெஃப்ட் பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட நயாரா எனர்ஜி, இந்தியா முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களை இயக்கி வருகிறது.
நான்கில் ஒரு பங்கை
ரூ.18 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்புள்ள இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏ.டி.எஃப் மற்றும் டீசலின் முக்கிய ஏற்றுமதியாளராகத் திகழ்கிறது.
அதன் குஜராத் ஜாம்நகரில் உள்ள இரண்டு சுத்திகரிப்பு ஆலைகள் சுமார் 5 மில்லியன் டன் விமான எரிபொருளை உற்பத்தி செய்து, பெரும்பாலானவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியாவின் மொத்த ஏ.டி.எஃப் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை ரிலையன்ஸ் உருவாக்குகிறது. இதனிடையே, ஈரானிய கச்சா எண்ணெய் வாங்கியதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை ரிலையன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை நிராகரித்தது.
ரிலையன்ஸ் பங்குகளின் இந்தத் திடீர் சரிவு, முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியை பாதித்தது. வெள்ளிக்கிழமை அன்று கிட்டத்தட்ட 2 சதவீதம் சரிவுடன் அவை வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ரிலையன்ஸ் பங்குகள் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 4 சதவீதம் சரிந்த நிலையில், கடந்த மாதத்தில் சுமார் 3 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |