ட்ரம்ப் நிர்வாகத்துடன் அம்பானி குடும்பத்தின் ரகசிய ஒப்பந்தம் வெளிச்சம்
அமெரிக்காவின் ProPublica வெளியிட்ட விசாரணை அறிக்கையில், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) மற்றும் ட்ரம்ப் குடும்பம் இடையே நடந்த ரகசிய வணிக ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அறிக்கையின் படி, ட்ரம்ப் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் (Donald Trump Jr.) மறைமுகமாக பங்குகளை வைத்திருந்த America First Refining என்ற டெக்சாஸ் நிறுவனத்தில், அம்பானி குடும்பம் குறைந்தது 100 மில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளது.

இந்த நிறுவனம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயற்சிக்கிறது.
இந்த முதலீட்டின் பின்னணியில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசாங்கத்திலிருந்து பல முக்கிய கொள்கை சலுகைகள் கிடைத்ததாக அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக, இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட வரிகள் குறைக்கப்பட்டதோடு, ரஷ்யா மற்றும் வெனிசுலா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.
அம்பானி குடும்பம் ட்ரம்ப் குடும்பத்துடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டிருந்தது. 2024-ல், ரிலையன்ஸ் நிறுவனம் ட்ரம்ப் நிறுவனத்திற்கு 10 மில்லியன் டொலர் Developmet Fee வழங்கியது. மேலும், அம்பானி குடும்ப நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ProPublica அறிக்கையில், இந்த ஒப்பந்தம் அரசியல்-வணிக நலன்கள் கலந்த சிக்கலான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது. விமர்சகர்கள் இதை “ட்ரம்ப் குடும்பத்தின் சுயநல வணிகம்” எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், ட்ரம்ப் ஜூனியர் தரப்பில், “அவர் வெறும் சிறிய முதலீட்டாளர் மட்டுமே” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிப்பாடு, அமெரிக்கா-இந்தியா உறவுகள், உலக எரிசக்தி சந்தை மற்றும் அரசியல்-வணிக ஒழுங்குகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |