ரஷ்யாவிற்கு எதிராக 21-வது பொருளாதார தடைகள் தொகுப்பை அறிவித்துள்ள ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்யாவிற்கு எதிராக 21-வது தடைகள் தொகுப்பை அறிவித்துள்ளது.
இந்த தடைகள் எரிசக்தி, நிதி சேவைகள், கிரிப்டோ, வர்த்தகம் மற்றும் முதல் முறையாக மீன் வளம் உள்ளிட்ட துறைகளை குறிவைத்துள்ளதாக ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.
புதிய நடவடிக்கைகளில், ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைக்கும் வகையில், எண்ணெய் விலை வரம்பில் automatic adjustment mechanism முறையை 2027 ஜனவரி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக 30 கப்பல்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. Shadow Fleet எனப்படும் மறைமுக கப்பல்களுக்கு ஆதரவு வழங்கும் சேவைகளும் தடைகளில் அடங்கும்.
ரஷ்ய எண்ணெய் தொடர்பான துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ரஷ்யாவிற்கு LNG கப்பல்கள் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
நிதி மற்றும் கிரிப்டோ துறையில், 31 ரஷ்யா வங்கிகள் மற்றும் 20 வெளிநாட்டு வங்கிகள், கிரிப்டோ நிறுவங்கள், எண்ணெய் வர்த்தகர்கள் ஆகியோருக்கு வரிவர்தனை தடைகள் விதிக்கப்படுகின்றன.
வர்த்தகத் துறையில், ரஷ்யாவின் இராணுவ தொழில்துறை பயன்படுத்தும் பொருட்கள், ட்ரோன் உபகரணங்கள் ஆகியவற்றிற்கு ஏற்றுமதி தடை விதிக்கப்படுகிறது. மேலும்,60 மில்லியன் யூரோ மதிப்புள்ள உலோகங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்படுகிறது.
மீன்வளத் துறையில், சில மீன் வகைகளின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு, Cod மீன் போன்றவற்றிற்கு முழுமையாக இறக்குமதி தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல், உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கும் ஒப்புதல் அளித்ததும் இந்த தடைகள் நடைமுறைக்கு வரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |