ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு புடின் விடுத்த எச்சரிக்கை..திரும்ப அழைக்கப்பட்ட தூதர்
ஆர்மீனியாவிலிருந்து ரஷ்யா தமது தூதரை திரும்ப அழைத்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
புடின் எச்சரிக்கை
தெற்கு காகசஸ் நாடான ஆர்மீனியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு எதிராக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கஜகஸ்தானில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளைத் தொடர்வதற்கு எதிராக அவர் இந்த கண்டனத்தை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆர்மீனியாவில் இருந்து ரஷ்யா தூதரைத் திரும்ப அழைத்துள்ளது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதில் ஆர்மீனியத் தலைமை எடுத்துள்ள நடவடிக்கைகள், யூரேசியப் பொருளாதார ஒன்றியத்திற்குள் ஒத்துழைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது குறித்து ஆலோசனை செய்வதற்காக, ஆர்மீனியா குடியரசிற்கான ரஷ்யத் தூதர் எஸ்.கோபிர்கின் மாஸ்கோவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்" என கூறப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |