தூதர்கள் ஒன்றாக ராஜினாமா! நாடு முழுவதும் வன்முறை..கொந்தளிப்பில் கருங்கடல் தேசம்
ஜார்ஜியாவில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமரின் அறிவிப்புக்கு தூதர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை 2028ஆம் ஆண்டு வரை கைவிடுவதாக, ஜார்ஜியாவின் பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, பாராளுமன்றத்தின் கட்டிடத்தின் சன்னலில் இருந்து தீப்பிழம்புகள் வருவதைக் கண்ட அதிகாரிகள், கலவரத்தை அடக்க ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை வீசினர்.
நாட்டின் பல நகரங்களிலும் போராட்டங்கள் ஆரம்பித்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தூதர்கள் பதவி விலகல்
இதனையடுத்து வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சகங்கள் மற்றும் நீதிபதிகள் என பலர் எதிர்ப்பு அறிக்கைகளை கூட்டாக வெளியிட்டனர்.
சுமார் 160 ஜார்ஜிய தூதர்கள் இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், நாட்டை சர்வதேச தனிப்படுத்துவதலுக்கு இட்டுச் செல்வதாகவும் விமர்சித்துள்ளனர்.
மேலும், தூதர்கள் பலர் இதற்கு எதிர்ப்பை காட்டும் விதமாக பதவி விலகியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |