இன்று இரவு எனது கடைசி போட்டி! ஓய்வை அறிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு, இன்றைய போட்டியுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப்போட்டி
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மோதுகிறது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்நோக்கும் போட்டியாக இது உள்ளது. எனவே இப்போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு, இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
IPL
அம்பத்தி ராயுடு ஓய்வு
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இரண்டு சிறந்த அணிகள் மும்பை மற்றும் சென்னை, 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆஃப்கள், 8 இறுதிப்போட்டிகள், 5 கோப்பைகள். இன்று இரவு 6வது. இது ஒரு சிறந்த பயணமாக இருந்தது. இன்று இரவு நடக்கும் இறுதிப்போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என நான் முடிவு செய்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
2 great teams mi nd csk,204 matches,14 seasons,11 playoffs,8 finals,5 trophies.hopefully 6th tonight. It’s been quite a journey.I have decided that tonight’s final is going to be my last game in the Ipl.i truly hav enjoyed playing this great tournament.Thank u all. No u turn ??
— ATR (@RayuduAmbati) May 28, 2023
2010ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய அம்பத்தி ராயுடு, 2018ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்.
மொத்தம் 202 ஐபிஎல் போட்டிகளில் ஒரு சதம், 22 அரைசதங்களுடன் அவர் 4329 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
BCCI/PTI