கடைசி நாள்! உங்கள் மனநிலை என்ன? ரசிகர்களிடம் CSK கேள்வி
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடக்க உள்ளதால், உங்கள் மனநிலை என்ன என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதல்
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் சம்பலத்துடன் மோத உள்ளதால், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சுப்மன் கில் CSK அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
அதே சமயம் சென்னை அணியின் தொடக்க வீரர்களான கான்வே, கெய்க்வாட் கூட்டணி வலுவாக உள்ளது. எனவே சிக்ஸர் மழை பொழிய அதிக வாய்ப்பு இந்தப் போட்டியில் உள்ளது.
CSK அணியின் ட்வீட்
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று செய்துள்ளது. அதில் 'கடைசி நாள்! உங்கள் மனநிலை என்ன, சூப்பர் ரசிகர்களே?' என கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் சிறந்த நாள் இது என்றும், மற்றொருவர் கோப்பை நமக்கு தான் என்றும் பதிலளித்துள்ளனர்.
Final Day! What's your mood, Superfans? ?#WhistlePodu #Yellove ??
— Chennai Super Kings (@ChennaiIPL) May 28, 2023