இன்றைய போட்டியில் வெற்றியடையுமா சென்னை? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
வெற்றிகரமாக நடைபெற்று வந்த IPL தொடர் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது.
இறுதிக்கட்ட போட்டியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளனர்.
இந்த போட்டியில் எந்த அணி வெற்றிக்கோப்பையை எடுத்து செல்லப்போகின்றார்கள் என்பது சந்தேகத்தில் தான் உள்ளது.
இன்றைய இறுதி போட்டி,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டியானது தொடங்கவுள்ளது.
Back to where the #SummerOf23 began! Bring it on, Titans! ??#IPL2023 #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/l2MQd6kcfZ
— Chennai Super Kings (@ChennaiIPL) May 26, 2023
சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் அணியான குஜராத் டைட்டன்ஸ் இன்று போட்டியை வென்று இரண்டாவது முறையும் வெற்றிக்கோப்பையை கைப்பற்றுமா என்றும், சென்னை அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா என்றும் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.