ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் இணைந்தார் பிரபல CSK கிரிக்கெட் வீரர்
ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு இணைந்தார்.
அம்பதி ராயுடு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர், முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.
இதனைத்தொடர்ந்து, சிஎஸ்கே அணியில் இணைந்ததார். 2018 முதல் 2023 -ம் ஆண்டு வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடினார். நடந்து முடிந்த 2023 -ம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் தனது ஓய்வு முடிவை அம்பதி ராயுடு அறிவித்தார்.
கட்சியில் இணைந்த அம்பதி ராயுடு
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்துளளார். அவரை, ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார்.
సీఎం క్యాంప్ కార్యాలయంలో ముఖ్యమంత్రి శ్రీ వైఎస్ జగన్ సమక్షంలో వైఎస్సార్ కాంగ్రెస్ పార్టీలో చేరిన ప్రముఖ భారత క్రికెటర్ అంబటి తిరుపతి రాయుడు.
— YSR Congress Party (@YSRCParty) December 28, 2023
ఈ కార్యక్రమంలో పాల్గొన్న డిప్యూటీ సీఎం నారాయణ స్వామి, ఎంపీ పెద్దిరెడ్డి మిథున్ రెడ్డి.#CMYSJagan#AndhraPradesh @RayuduAmbati pic.twitter.com/QJJk07geHL
வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குண்டூர் மாவட்டத்தில் அம்பதி ராயுடு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |