நான் இன்னும் ஜானி டெப்பை காதலிக்கிறேன்: அம்பர் ஹெர்டு பேட்டி
அம்பர் ஹெர்டு தனது முன்னாள் கணவர் ஜானி டெப்பை இன்னும் நேசிப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
என்பிசி நியூஸின் சவன்னா குத்ரீ (Savannah Guthrie) உடனான ஹெர்டின் பிரத்யேக நேர்காணலின் இரண்டாவது பகுதியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருவருக்கும் இடையேயான அவதூறு வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த பிறகு ஹெர்டு கொடுத்த முதல் பேட்டி இதுவாகும்.
பேட்டியின்போது, அவதூறு வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் கூறியது போல், எல்லாவற்றிற்கும் மேலாக, டெப் மீது "இன்னும் காதல் இருக்கிறதா" என்று குத்ரீ கேட்டபோது நிச்சயமாக என்று ஹெர்டு கூறினார்.

"நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை முழு மனதுடன் நேசித்தேன்," என்று ஹெர்டு கூறினார். "ஆழமாக உடைந்த உறவை உருவாக்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், என்னால் முடியவில்லை" என்று கூறினார்.
மேலும், "எனக்கு அவர் மீது எந்த மோசமான உணர்வுகளோ அல்லது தவறான எண்ணமோ இல்லை" என்று அவர் கூறினார். "அதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம் அல்லது நீங்கள் எப்போதாவது யாரையும் நேசித்திருந்தால் புரிந்துகொள்வது மிகவும் எளிதாக இருக்கலாம்" என்று பதிலளித்தார்.

அவர் இன்னும் அவரை நேசிப்பதாக ஒப்புக்கொண்டாலும் கூட, தனது முன்னாள் கணவர் ஜானி டெப்பால் மீண்டும் தன மீது வழக்குத் தொடரப்படலாம் என்று பயப்படுவதாக கூறியுள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        