நாவூறும் சுவையில் ஆம்பூர் சிக்கன் பிரியாணி.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.
பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும் இந்த பிரியாணியின் சுவை அனைவரையும் அடிமையாக்கி விடும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் ஆம்பூர் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரக சம்பா- 1kg
- சிக்கன்- 1kg
- தயிர்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை- 1
- பட்டை- 2
- ஏலக்காய்- 4
- கிராம்பு- 4
- ஜாதிபத்திரி- 1 துண்டு
- பிரிஞ்சி இலை- 2
- நட்சத்திர பூ- 1
- நல்லெண்ணெய்- 250ml
- வெங்காயம்- 3
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 3 ஸ்பூன்
- தக்காளி- 4
- உப்பு- தேவையான அளவு
- புதினா- 1 கைப்பிடி
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- காய்ந்த மிளகாய்- 10
- பச்சை மிளகாய்- 4
- நெய்- 300ml
செய்முறை
முதலில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பிறகு கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரிஞ்சி இலை, பட்டை, ஸ்டார் பூ போட்டு வறுக்கவும்.
பின் இதில் வெங்காயம் போட்டு மிதமான தீயில் வதக்கவும், பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இதற்கு முன்னதாக காய்ந்த மிளகாயை சுடு தண்ணீரில் ஊறவிட்டு அதை வடிகட்டி மிக்ஸ்யில் போட்டு அரைத்து சேர்க்கவும்.
அடுத்து தக்காளி போட்டு நன்கு வதங்கியதும் இதில் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தயிர் ஊற்றி கிளறவும்.
இதற்கடுத்து கொத்தமல்லி, புதினா இலைகளை போட்டு வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் சிக்கன் சேர்த்து கலந்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
இதனிடையே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், பச்சை மிளகாய், உப்பு மற்றும் 20 நிமிடம் ஊறவைத்த சீரகச்சம்பா அரிசியை சேர்த்து பாதியளவு வேகவைத்து எடுக்கவும்.
வடித்த அரிசியை சிக்கன் கலவையில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும்.
அடுத்து நெய் ஊற்றி பாத்திரத்தை மூடி பத்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
இறுதியாக அடுப்பை அனைத்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டால் சூப்பரான ஆம்பூர் சிக்கன் பிரியாணி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |