உடல் எலும்பு வலுப்பெற சுவையான எள்ளு லட்டு: இலகுவாக செய்வது எப்படி?
வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் கிடைக்க சிறுதானியங்கள், பயறு வகைகளைக் கொண்டு செய்யக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
அந்தவகையில், எள்ளு அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும்.
குழைந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் சத்தான எள்ளு லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எள்ளு- 300g
- வெல்லம் - 500g
- வேர்க்கடலை - 300g
- தேங்காய் துருவல் - 300g
- ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எள்ளைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே கடாயில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனையடுத்து துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இது அனைத்தும் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து எள்ளு மற்றும் வேர்க்கடலை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துகொள்ளவும்.
பின்னர் இதில் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து விட்டுவிட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனுடன் வெல்லம் சேர்த்து அரைத்தபின் ஒரு பாத்திரத்தில் மாற்றி நெய் சேர்த்து நன்கு பிணைந்துகொள்ளவும்.
லட்டு பிடிக்கும் பதத்திற்கு வரும் வரை பிணைந்து விட்டு சிறிய லட்டுகளாக பிடித்து எடுத்தால் சுவையான எள்ளு லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |