முழங்கால் வரை முடி வேகமாக வளர உதவும் அரிதான எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
முடி வளர்ப்பது என்பது தற்போது ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருப்பினும் பலருக்கும் வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், முடி வேகமாக வளர உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உலர்ந்த செம்பருத்தி பூ- 1 கப்
- உலர்ந்த நெல்லிக்காய்- 1 கப்
- தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
தயாரிக்கும் முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும்.
பின் தேங்காய் எண்ணெயில் காய்ந்த செம்பருத்திப் பூக்கள் மற்றும் நெல்லிக்காய் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை குறைந்த வெப்பத்தில் சுமார் 20 நிமிடங்கள் சூடாக்கவும்.
அதன் பிறகு, அடுப்பை அனைத்து இதனை நன்கு ஆற வைக்கவேண்டும்.
ஆறிய பிறகு செம்பருத்திப் பூக்கள் மற்றும் ஆம்லா விதைகளை வடிகட்டி, எண்ணெயை சுத்தமான பாட்டில் ஊற்றவும்.
பயன்படுத்தும் முறை
உச்சந்தலை முடிக்கு எண்ணெய் தடவி சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதனை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அல்லது ஒரு இரவு முழுக்க எண்ணெயை உச்சந்தலையில் அப்படியே விடவும்.
அடுத்து, லேசான ஷாம்பூவுடன் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |