நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக்க பிளாக் டீ ஒன்று போதும்.
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கப் தண்ணீரை எடுத்து, அதனை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
பின் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கருப்பு தேயிலை தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
தேயிலை இலைகளைக் கலந்த பிறகு, சிறிது நேரம் வேகவைத்து, பின்னர் இறக்கி வைக்கவும்.
அடுத்து இதனை வடிகட்டி, தலைமுடியில் நன்றாக படும்படி தடவிவிட வேண்டும்.
பிளாக் டீயை தலையில் தடவிய பின் 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின் குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
பிளாக் டீயை உச்சந்தலையில் தடவி பிறகு ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.
இந்த மூலிகை தேநீர் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளை முடியை தடுக்க இந்த பிளாக் டீயை இயற்கையான முடி சாயமாக பயன்படுத்தலாம். மேலும், இது நரை முடி வராமல் தடுக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |