பிரதமர் உயிருக்கு ஆபத்துன்னா உங்கள சும்மா விடமாட்டோம்! அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ஈராக் நாட்டின் பிரதமர் மீது நடத்தப்பட்ட ரகசிய தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முஸ்தபா அல் கமிதி என்பவர் உள்துறை தலைவராக இருந்த பொழுதே அமெரிக்காவோடு நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர் தற்போது ஈராக் நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். பிரதமராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பிரதமர் முஸ்தபா அல் கமிதியின் வீட்டில் பயங்கரவாத அமைப்பினர் ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை நிரப்பி ரகசிய தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 7 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பிரதமர் உட்பட லேசான காயங்களுடன் உயிர் தப்பித்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பேசியதாவது, ஈராக் அரசின் பிரதமர் மீது நடத்தப்பட்ட இந்த வெளிப்படையான பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
ஈராக்கின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு பொறுப்பேற்றுள்ள அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.