அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு போட்டியாக விவேக் ராமசாமி
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு போட்டியாகக் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார் இந்திய வம்சாவளியாளரான விவேக் ராமசாமி.
2024 அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியேற்றார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தல் தற்போது துவங்கவுள்ளது. இதனிடையே அமெரிக்க மக்கள் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
ஜனநாயக கட்சியில் ஜோ பைடன்
2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் இத்தேர்தலில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகள் இரண்டும் போட்டியிடுகின்றன. இதில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவார் என தெரிகிறது.
குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் குடியரசு கட்சியில் யாரும் தன்னை எதிர்த்துப் போட்டியிடக் கூடாது என்பதில் டொனால்ட் ட்ரம்ப் முனைப்பாகச் செயல்படுகிறார். மேலும் கட்சியின் உறுப்பினர்களிடமும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
ட்ரம்புக்கு எதிராகக் களமிறங்கும் விவேக் ராமசாமி
குடியரசு கட்சி சார்ப்பில் விவேக் ராமசாமி என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடப் போவதாகத் தெரிய வந்துள்ளது. அக்கட்சி சார்பாக ஏற்கனவே ட்ரம்ப் போட்டியிடுவதால் இவரும் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான விவேக் ராமசாமி என்பவரது பூர்விகம் கேரள மாநிலம் வடக்கன் சேரி ஆகும். ஒஹியோவில் பிறந்த விவேக் ராமசாமி சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.