கொரோனா எதிரொலி! அமெரிக்காவில் 3வது டோஸ் தடுப்பூசி போட அனுமதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலக நாடுகளிலே கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா தான். இதுவரை அமெரிக்காவில் 3 கோடியே 64 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் 70% சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கொரோனாவின் வீரியம் குறைந்தபாடில்லை.
தற்போது அமெரிக்காவில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் பாதிப்பு அதிகரித்து வருவது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.