சிறுமிகள் தான் குறி! அமெரிக்காவில் 37 வயதான குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை
37 வயதான Darryl Anthony Parnellக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.
அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவில் சிறார்களை குறிவைத்து பாலியல் தாக்குதல் நடத்திய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
Gulfport-ஐ சேர்ந்தவர் Darryl Anthony Parnell (37). இவர் 4 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
அதன்படி மேலும் 4 சிறுமிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என தெரியவந்தது. அந்த நால்வரின் வயது 6ல் இருந்து 10க்குள் இருக்கும் என பொலிசார் தெரிவித்தனர்.
Office of District Attorney W. Crosby Parker
இது தொடர்பான விசாரணை மூன்று நாட்கள் நீடித்தது, ஆனால் குற்றவாளி தீர்ப்பை வழங்க நீதிமன்றத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஆனது.
அதன்படி நீதிபதி லாரி பூர்ஷ்வா Darrylக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி இழிவான குற்றங்களில் Darrylஈடுபட்டார் என நீதிபதி தெரிவித்தார்.