அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் காயம்! ஜனாதிபதி ஜோ பைடன் ஆய்வு.
அமெரிக்காவில் Pittsburgh பகுதியில் உள்ள பாலம், ஒரு பேருந்து உட்பட 6 வாகனங்கள் செல்லும் போது இடிந்து விழுந்ததில் 10 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதுடன், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Pittsburgh உள்ள Forbes Avenue பகுதியில் பனி மூடிய நிலையில் இருந்த பாலத்தில் ஒரு பேருந்து உட்பட 6 வாகனங்கள் சென்றுகொண்டு இருக்கும் பொது நிலைகுலைந்து இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.
இதில் 10 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அன்று காலை உள்ளுர் நேரப்படி 6:00க்கு (11:00 GMT) நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தீயணைப்பு வீரர் Chief Darryl Jones கூறும்போது, இடிபாடுகளில் சிக்கியவர்களை மனிதசங்கலி தொடர் அமைத்து காப்பாற்றியதாக தெரிவித்தார்.
பேருந்து பாலத்தில் சென்றுகொண்டு இருக்கும் போது பாலம் நன்கு குலுங்கியது என்றும் திடீரென பாலம் இடிந்து விழுந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பியது ஆறுதல் தருவதாகவும் அந்த பேருந்து ஓட்டுநர் Daryl Luciani தெரிவித்துள்ளார்.
Pittsburgh உள்ள இந்த இடிந்த பாலத்தில் இருந்து 16km தொலைவில் உள்ள West Mifflin என்ற பகுதியில் உரையாற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி ஜோ பைடன். இடிந்த பாலத்தையும் வந்து பார்வையிட்டார்.
இதுகுறித்து ஜனாதிபதி
ஜோ பைடன் கூறுகையில் Pittsburgh பகுதியில், அமெரிக்காவின் வேறு எந்த பகுதிகளை காட்டிலும் அதிக பாலம் இருப்பது தனக்கு தெரியாது என்றும், விரைவில் அனைத்தையும் புனரமைப்போம். இது நகைச்சுவைக்காக கூறவில்லை எனவும் தெரிவித்தார்.