மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்! அடுத்த மூன்று மாதங்களில் இது நடக்கும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் சுமார் 140 மில்லியன் பேர் நோய் தொற்றால் பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. கொரோனாவில் இருந்து தொடர்ந்து புதிய அலைகள் உருமாறி மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றது.
கொரோனாவில் இருந்து படிப்படியாக உலகம் மீண்டு வந்த நிலையில் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட Omicron மாறுபாடு உலகை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் Omicron பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் மீண்டும் கொரோனா ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. கடந்த வாரம் பதிவான தொற்றுகள் 73% Omicron பாதிப்பால் ஏற்பட்டதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கூறியதாவது, வருகின்ற ஜனவரி முதல் மார்ச் வரை சுமார் 140 மில்லியன் பேர் பாதிக்கப்படக்கூடும் என்றும் கிட்டத்தட்ட 60 சதவீத அமெரிக்கர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று கணித்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக தினசரி 2.8 மில்லியன் பேருக்கு புதிதாக தொற்று உருவாகலாம். இது குறித்து Dr Chris Murray பேசியது, இதுவரை அமெரிக்காவில் 40 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 முதல் 3 மாதங்களில் அமெரிக்காவில் 60 சதவிகிதம் Omicron பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.