Omicron வேகமாக பரவினால் இந்த ஆபத்து அதிகம்! அமெரிக்க முன்னணி விஞ்ஞானி எச்சரிக்கை
Omicron வேகமாக பரவினால் கோவிட் புதிய பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை Omicron வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
அதன் பிறகு தற்போது சுமார் 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
அதிக பரவக்கூடிய மாறுபாடு மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக Omicron மாறியுள்ளது. இதனால் அமெரிக்காவில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட மக்களுக்கு Omicron பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி Dr. Anthony Fauci இதுகுறித்து கூறியதாவது, Omicron எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கோவிட் புதிய பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
Omicron வைரஸால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறைவாக இருந்தாலும் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது.
Omicronனில் குறைந்த அளவிலான தீவிரத்தன்மை இருந்தாலும் அதிகமான நபர்களை தாக்கும் வலிமை அதுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை விரையில் போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.