அமெரிக்க தேவாலயத்தில் வேட்டி சேலை அணிந்து வழிபட்ட தமிழ் குடும்பங்கள்! வைரலாகும் புகைப்படம்
அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் நடந்த விழாவில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹென்டன் என்ற பகுதியில் பெரும்பாலும் தமிழ் குடும்பங்களே வசித்து வருகின்றனர். ஹென்டன் நகரில் புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட் புகழ்பெற்ற தேவாலயம் ஒன்றுள்ளது. அங்கு வழக்கம் போல் பிராத்தனை நடைபெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற தமிழ் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பாரம்பரிய முறைப்படி ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் சேலையிலும் சிறுமிகள் பாவாடை- தாவணி அணிந்து பிராத்தனையில் பங்கேற்றனர்.
இதையடுத்து அவர்கள் தேவாலயத்தில் உள்ள பீடத்தில் நின்று தமிழ் பாடலை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலில் பாடினர்.
இதனை தேவாலயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற அமெரிக்க மக்கள் கண்டு ரசித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.