லொறியில் மறைந்திருந்த 100 புலம்பெயர்ந்தவர்கள்: தப்பி ஓடியவர்களை மடக்கி பிடித்த பொலிசார்!
அமெரிக்காவின் டெக்சாஸ் சாலையில் உடைந்த டிராக்டர் டிரெய்லரில்(லொறி) டஜன் கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் மறைந்து இருப்பதை கண்டு பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த வெள்ளிகிழமையன்று அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து தென்மேற்கே 100 மைல் தொலைவில் உள்ள டெக்சாஸ் ஸ்டேட் ரூட் 59 க்கு அருகில் காலை 7:30 மணியளவில் உடைந்த 18 சக்கர டிராக்டர் டிரெய்லர்(லொறி) ஒன்றை ஜாக்சன் கவுண்டி ஷெரிப் அலுவலக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அப்போது அந்த லொறியின் டிரக்கை பொலிஸ் அதிகாரிகள் திறந்துபோது அதனுள், டஜன் கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர், மேலும் இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், லொறி டிரக்கில் குறைந்தது 70 முதல் 100 புலம்பெயர்ந்தவர்கள் வரை இருந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பொலிஸ் அதிகாரிகளை கண்ட வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் பலர் ஓடி சென்று அருகிலுள்ள புதர்கள் மற்றும் சோள வயல்களில் ஒழிந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து, அவர்களை துரத்தி பிடித்த கவுண்டி ஷெரிப் பொலிஸார், இதுவரை 46 புலம்பெயர்ந்தவர்களை கைதுசெய்து இருப்பதாகவும், இன்னும் அதிகமான புலம்பெயர்ந்தவர்களை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த அதிரடி நடவடிக்கையின் போது காயமடைந்த நபர்களுக்கு ஜாக்சன் கவுண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவுடனான பாலம் இன்னும் அழிக்கபடவில்லை: ஜெலென்ஸ்கி உருக்கம்!
டெக்சாஸ் மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு ஆக்கிரமிப்பு அணுமுறையை தொடர்ந்து எடுத்து வருவதால் இத்தகைய கண்டுபிடிப்புகள் நடந்துள்ளது குறிப்பிடதக்கது.