ரஷ்யாவுடனான பாலம் இன்னும் அழிக்கபடவில்லை: ஜெலென்ஸ்கி உருக்கம்!
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாலம் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது மூன்று மாதங்களாக நடைப்பெற்று வரும் நிலையில், போர் பதற்றத்தை தணிப்பதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தையும் மார்ச் 10ம் திகதிக்கு பிறகு எற்படவில்லை.
இந்தநிலையில் உக்ரைனின் சாதம் ஹவுஸ் திங்க் டேங்க்(Chatham House think tank) நடத்திய நிகச்சியில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பாலங்கள் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் பிப்ரவரி 23ம் திகதிக்கு முந்தைய நிலைக்கு ரஷ்ய ராணுவம் பின் வாங்கிகொள்ளப்பட்டால் மட்டுமே நாங்கள் சாதாரணமாக விஷயங்களை விவாதிக்க ஆரம்பிக்க முடியும் மற்றும் அமைதி பேச்சுவார்த்தைகள் மீண்டும் நடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையால் அந்த நாட்டுடனான அனைத்து பாலங்களும் முழுமையாக அழிந்தாலும், எல்லாப் பாலங்களும் இன்னும் அழியவில்லை என்று நினைக்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இரண்டாவது முறை... தைவானை ஊடுருவிய 18 போர் விமானங்கள்: வெளிவரும் பகீர் தகவல்
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை தொடர்வது என்பது, படையெடுப்பிற்கான ரஷ்யாவின் தவறான கதைகளுக்கு நம்பகத்தன்மை வழங்கும் என்பதால் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.