Fact Check: ரசாயன கழிவால் மீன்கள் இறந்தாக பரவும் வீடியோ உண்மையானதல்ல!
போபால் விஷவாயு துயரம் மற்றும் செர்னோபில் பேரழிவு இரண்டையும் ஒப்பிடும் வகையில் அமெரிக்காவில் நடந்த ரயில் விபத்து சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தடம் புரண்ட ரயில்
போபால் விஷவாயு துயரம் மற்றும் செர்னோபில் பேரழிவு ஆகிய இரண்டையும் ஒப்பிடும் வகையில் அமெரிக்காவில் நடந்த ரயில் விபத்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது.
@Getty images
பிப்ரவரி 3 அன்று, பென்சில்வேனியாவிலிருந்து இல்லினாய்ஸ் நோக்கிச் சென்ற ரயில், கிழக்கு பாலஸ்தீனத்தின் ஓஹியோவில் உள்ள கிராமத்தில் தடம் புரண்டது.அந்த ரயிலிருந்து ரசாயன கழிவுகள் வெளியாகி அப்பகுதியில் காற்றையும், நீரையும் மாசு படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதித்தாக குற்றச்சாட்டு
சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் காற்று மற்றும் நீரின் தரம் பாதுகாப்பாக உள்ளது என்றும், பெரிய அளவிலான மாசுபாடு இல்லை என்றும் அரசு அதிகாரிகள் உறுதியளித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகள் வருவதாகவும் மேலும் விபத்தின் விளைவாக விலங்குகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
பொய்யான வீடியோ வைரல்
நச்சு இரசாயன கசிவு குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அவ்வகையில் ஆயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கிய குறிப்பிட்ட ஒரு வீடியோ வைரல் ஆனது. இந்த வீடியோ ஓஹியோவில் ரயில் விபத்துக்கு பின்பான ரசாயன கழிவால் உண்டானதென்று மக்கள் கூறினர்.
ஆனால் அந்த வீடியோ ஒரு வருடங்களுக்கு முன்பு ஜனவரி 21 அன்று லகுனா டெல் பிளாட்டாவின் அதிக வெப்பநிலை மற்றும் மழையின்மை காரணமாக தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் இறந்துவிட்ட போது எடுக்கப்பட்ட காணொளி எனத் தெரிய வந்துள்ளது. சர்ச்சையான இவ்விசயம் முடிவாகக் கேள்விக்குரிய வீடியோ அர்ஜென்டினாவைச் சேர்ந்தது என்பதும் இது ஓஹியோ சம்பவத்திற்கு முந்தையது என்பதும் தெளிவாகிறது.