கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இது தான்! வெளியான முக்கிய தகவல்
கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த அமெரிக்கா நாட்டில் இதுவரை 5.71 கோடி மக்கள் மூன்றாவது தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய Omicron வைரஸ் உலக நாடுகளில் படையெடுக்க தொடங்கியுள்ளது.
இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் அமெரிக்கா கொரோனா தொற்றால் பல லட்ச உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.
இதையடுத்து அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தலைமையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல வகையில் தீவிர முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன், பைசர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு மொத்தம் 49,00,30,849 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் மாடர்னா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்களின் மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இதுவரை சுமார் 5.71 கோடி பேர் செலுத்தி கொண்டுள்ளனர்.