5 ஆண்டுகளாக.. வீட்டின் சுவரை உடைத்து அமெரிக்க பெண் செய்யும் வினோத செயல்! வைரலாகும் புகைப்படங்கள்
அமெரிக்காவில் பெண் ஒருவர் வீட்டின் சுவரை உடைத்து சாப்பிடும் வினோத பழக்கத்தை கொண்டிருப்பது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மெக்சிகன் மாகாணத்தில் வசித்து வருபவர் நிக்கோலே. இவர் பள்ளி கற்கும் பருவத்தில் இருந்தே சாக்பீஸ், பல்பம் போன்றவை சாப்பிட்டு வந்துள்ளார்.
இதை பார்த்த பெற்றோர்களும் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால் அவரால் அந்த பழக்கத்தை இன்று வரை முழுமையாக விடமுடியாமல் தவித்து வருகிறார்.
அவரின் வினோத பழக்கம் தற்போது சாக்பீஸ், பல்பத்தை தாண்டி வீட்டின் சுவரை பெயர்த்து சாப்பிடும் அளவிற்கு சென்றுள்ளார். இவர் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 3 சதுரடி சுவரையாவது சாப்பிட்டு விடுகிறார் என்று கூறப்படுகிறது.
நிக்கோலேவின் வினோதமான பழக்கத்தை பற்றி அவரது உறவினர்கள் கூறியது, இவரது தாயார் உயிரிழந்த போது தொடங்கிய பழக்கம் சுமார் 5 வருடங்களாக தொடர்ந்து சுவரை சாப்பிட்டு வருகிறார்.
இதனால் புற்றுநோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தும் இவரால் இந்த வினோத பழக்கத்தை விடமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.