தரையிறங்கிய போது வெடித்த விமானத்தின் டயர்: விபத்தில் சிக்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்
American Airlines Plane Tyre Burst during Landing: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியது.
விபத்தில் சிக்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்
ஸ்பெயினின் பார்சிலோனா நகரிலிருந்து பறந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சிக்காகோ நகரில் தரையிறங்கிய போது விமானத்தின் டயர் வெடித்து விபத்தில் சிக்கியது.
சிக்காகோ ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(20.10.2026) நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 234 பயணிகள் மற்றும் 11 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 245 பேருடன் பறந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஃப்ளைட் 41 என்ற போயிங் 787-800 ரக விமானத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக, விமானத்தின் வலது பக்க பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதை விமானப் பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு இது தொடர்பாக தகவல்களை தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பணியில் இருந்து நீக்கப்பட்ட விமானம்
இந்த டயர் வெடிப்பு விபத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானம் சேவையிலிருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய விமானத்தை முழுமையாக பராமரிப்புக் குழுவினர் ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பயணிகள், விமான பணியாளர்கள் என யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் இது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்று வருவதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.