தவறாக வீடு மாறி சென்ற கறுப்பின இளைஞர் மீது துப்பாக்கி சூடு: சகோதரர்களை அழைக்க செல்கையில் நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஒருவர் தனது இளைய இரட்டை சகோதரர்களை அழைத்து வர தவறான வீட்டிற்குச் சென்றதால், தலையில் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறான வீட்டிற்கு சென்ற இளைஞர்
அமெரிக்காவிலுள்ள மிசோரியின் கன்சாஸ் நகரில் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு 10 மணியளவில், கறுப்பின இளைஞர் ஒருவர் தனது இளைய இரட்டை சகோதரர்களை அழைத்து வர தவறான வீட்டிற்கு சென்றுள்ளார்.
@facebook
அப்போது அந்த வீட்டிலிருந்த நபர் இளைஞரின் தலையில் சுட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து 16 வயதான (Ralph Yarl) ரால்ப் யால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரால்ப் யால் ஒரு முறை தலையில் சுடப்பட்டதாகவும், தரையில் விழுந்த பிறகு இரண்டாவது முறையாகவும் சுடப்பட்டதாகவும் அவரது அத்தை ஃபெயித் ஸ்பூன்மோர் கூறியுள்ளார்.
மேலும் துப்பாக்கி சூடு நடந்த பின்பு அந்த இளைஞனை காப்பாற்ற உதவுவதற்கு முன்பு, அருகிலிருந்த மூன்று வெவ்வேறு வீடுகளின் கதவை தட்டியதாக ஸ்பூன்மோர் தெரிவித்துள்ளார்.
@facebook
ரால்ப் உயிருக்கு ஆபத்தான காயம் இருந்ததாகவும், ஆனால் அவர் நிலையாக இருப்பதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீதிக்கு போராடிய மக்கள்
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்சாஸ் நகரில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ரால்ப் சுடப்பட்டதாகக் கூறப்படும் வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் கூடி கோசம் எழுப்பியிருக்கிறார்கள்.
ரால்பின் அத்தை, அவர் ஒரு "அருமையான இளைஞர்" என்றும், பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் படிக்க விரும்பும் திறமையான இசைக்கலைஞர் என்றும் கூறியுள்ளார்.
@ct
ரால்ப் சுட்டதாக கூறப்படும் வீட்டு உரிமையாளர் கடந்த ஏப்ரல்13 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு விசாரணைக்காக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிவில் உரிமைகள் வழக்கறிஞர் பென் க்ரம்ப் உள்ளூர் ஊடகத்திடம், "குற்றவாளி ஒரு வெள்ளையர் என்று ரால்பின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.இது இனவாதத்தால் நேர்ந்த கொடூரம் என்பதை யாராலும் மறுக்க முடியாது” கூறியுள்ளார்.
@kmbc
இளைஞரின் காயங்கள் காரணமாக, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை பொலிஸார் இதுவரை எடுக்கபடவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ரால்பின் மருத்துவச் செலவுகளுக்காகப் பணம் திரட்டும் GoFundMe பக்கம் $700,000 (£565,000) அதிகமாகச் சேகரித்துள்ளது.