ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட அமெரிக்க சிறுவன் மாரடைப்பால் மரணம்
அமெரிக்காவில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட 14 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயங்கிய சிறுவன்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வரும் மாணவன் நாக்ஸ் மேக்ஈவன். இவருக்கு வயது 14. இவர், டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார்.
இவர், தனது பயிற்சிக்காக ஓட்டப்பயந்தயத்தில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், 5 கி.மீ ஓட்டப்பந்தய பயிற்சியில் நாக்ஸ் மேக்ஈவன் கலந்து கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
சிறுவன் மரணம்
உடனே, தகவல் அறிந்ததும் அவசரகால சிகிச்சை குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். எனினும், சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்திற்கு பள்ளியின் முதல்வர் ஜிம்மி அர்ரோஜோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறுவன் அந்த பகுதியில் நன்மதிப்பை பெற்றிருந்தார். இவரது நண்பர், இறுதி சடங்கிற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு ரூ.55 லட்சம் சேர்த்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |