கல்லூரி முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங்: 7 சீனியர்கள் கைது
தமிழக மாவட்டம், கோவையில் முதலாமாண்டு கல்லூரி மாணவரை ராகிங் செய்த 7 கல்லூரி மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராகிங்
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் செய்வதை தடுப்பதற்காக குழுக்கள் அமைத்து கண்காணிக்க தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி சில கல்லூரிகளில் ராகிங் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு கல்லூரி மாணவரை, பல மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்ததாக கூறப்படுகிறது.
அதாவது, சம்பவம் நடந்த அன்று மது குடிப்பதற்காக பணம் வேண்டுமென்று ஜூனியர் மாணவரிடம் சீனியர் மாணவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், பணத்தை தர மறுக்கவே அவரை தாக்கி மொட்டை அடித்துள்ளனர்.
பொலிஸார் கைது
இதனை ஜுனியர் மாணவர், தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து கோவை பீளமேடு காவல்துறையில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் படி, கல்லூரி மாணவர்களான மணி, மாதவன், வெங்கடேஷ், தரணிதரன், யாலிஸ், ஐயப்பன், சந்தோஷ் ஆகிய ஏழு பேரை பொலிஸார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |