கருங்கடல் பகுதியில் வட்டமிட்ட அமெரிக்க ட்ரோன்... விரைந்த ரஷ்ய மீட்புக்குழு: ரஷ்ய கப்பலை தாக்கியதா உக்ரைன்?
கருங்கடல் பகுதியில் மற்றொரு ரஷ்ய போர்க்கப்பலை உக்ரைன் தாக்கியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Admiral Makarov என்னும் 500 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய அந்த போர்க்கப்பல், பாம்புத் தீவுக்கு அருகில் பிரச்சினைக்குள்ளாகியிருப்பதாக உக்ரைனின் Odesa கவுன்சில் தலைவரான Oleksiy Goncharenko என்பவர் தெரிவித்துள்ளார்.
அந்த ரஷ்யப் போர்க்கப்பல் உக்ரைன் ஏவுகணை ஒன்றினால் தாக்கப்பட்டதாக வெளியான உள்ளூர் ஊடகச் செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ரஷ்யாவின் Sevastopol துறைமுகத்திலிருந்து, தாக்குதல் நடந்ததாக கூறப்படும் பகுதிக்கு ரஷ்ய மீட்பு படகுகளும், விமானங்களும் விரைந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், அந்த இடத்தின் அருகில் அமெரிக்க ட்ரோன் ஒன்று வட்டமிட்டதாக விமானங்களை ட்ராக் செய்யும் தரவு காட்டுகின்றது.
அப்படி Makarov கப்பல் தாக்கப்பட்டது உறுதியானால், ஏற்கனவே ரஷ்யாவின் கௌரவமாக கருதப்பட்ட மாஸ்க்வா கப்பலும் உக்ரைனால் தாக்கி அழிக்கப்பட்ட நிலையில், இது ரஷ்யாவுக்கு மற்றொரு பெரும் தலைக்குனிவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.