யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்: நிவாரணப் பொருட்கள் விநியோகம் தீவிரம்
நிவாரண பொருட்களுடன் அமெரிக்க விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
இலங்கையை புயல் வெள்ளம் புரட்டி போட்டதை அடுத்து, பல்வேறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவி விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.
பேரிடர் நிவாரண விநியோக நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இரண்டு C130J Super Hercules விமானங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த விமானங்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், வடக்கு பகுதிக்கான நிவாரண பொருட்களுடன் அமெரிக்க விமானம் ஒன்று இன்று காலை யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த அமெரிக்க விமானங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |