அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞர் மீது குற்றச்சாட்டு! 51 மாதங்கள் சிறைத் தண்டனை
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞருக்கு 51 மாதச் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தானியங்கி ரோபோ கால்கள் மூலம் மோசடி
அமெரிக்காவின் தெற்கு காரோலினா மாகாணத்தில் வசித்து வரும் ஜீல் பட்டேல் என்ற 22 வயது இந்திய வம்சாவளி இளைஞர், கால் சென்டர் மூலம் முதியோர்களை ஏமாற்றி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதன் பேரில் விசாரணையைத் துவங்கிய அமெரிக்காவின் FBI அதிகாரிகள், ஜீல் பட்டேல் இந்தியாவில் உள்ள கால் சென்டர்கள் மூலம் அமெரிக்காவில் வாழும் முதியவர்களை ஏமாற்றி பண மோசடி செய்ததைக் கண்டறிந்துள்ளனர்.
@ Middle East Monitor
நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த கால் சென்டர்கள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொள்ளும் தானியங்கி ரோபோ கால்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் அவசர உணர்வை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
3 மில்லியன் டொலர்கள்
கொரியர் டெலிவரி வேலை செய்யும் ஜீல் பட்டேல் பொய்யான மின்னஞ்சல்கள் மூலம் முதியோர்களிடம் சென்று பணம் பெற்றுள்ளார். இவர் பவீன் குமார் சன்னி என்பவரிடம் பணியாற்றி வருகிறார்.
சன்னியின் நிறுவனம் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட முதியவர்களை ஏமாற்றி 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
51 மாதச் சிறை தண்டனை
முதியோர்கள் மீதான மோசடி மற்றும் நிதி மோசடிகளை எதிர்த்துப் போராடுவது அமெரிக்க நீதித்துறையின் முக்கிய முன்னுரிமையாகும். முதியோரை ஏமாற்றுவது என்பது நபரின் அலட்சியமான செயலாகும், இது வயதானவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இதன் பேரில் குற்றம் சாட்டப்பட்ட ஜீல் பட்டேலுக்கு 51 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பவீன் குமார் சன்னியின் நிறுவனமும் முடக்கப்பட்டு அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.