எபோலாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்... வைரஸ் பாதித்த நாடுகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

Virus Democratic Republic of the Congo
By Arbin May 19, 2026 07:30 AM GMT
Report

காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை 100 கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வரும் மக்களைக் கட்டுப்படுத்த, அமெரிக்கா பொது சுகாதாரச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது.

அமெரிக்கர் ஒருவருக்கு

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் பரவியுள்ள எபோலா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச முயற்சி ஒன்று நடைபெற்று வருகிறது.

எபோலாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்... வைரஸ் பாதித்த நாடுகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு | American Infected Us Limit Entry

இந்த நோய்த்தொற்றால் 100க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டிருப்பதாக ஆப்பிரிக்க சி.டி.சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் பணியாற்றி வந்துள்ள அமெரிக்கர் ஒருவருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை அந்த நபர் அடையாளம் காணப்படாத நிலையில், கிறிஸ்தவ மிஷனரி மருத்துவரான பீற்றர் ஸ்டாஃபோர்ட் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொண்டு நிறுவனமான செர்ஜ் தெரிவித்துள்ளது.

எபோலா பரவல் ஏற்பட்டுள்ளப் பகுதிகளில் பீற்றர் ஸ்டாஃபோர்ட் மற்றும் அவரது மனைவியும் மருத்துவருமான ரெபேக்கா ஸ்டாஃபோர்ட் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். நோய்த்தொற்று தொடர்பில் இருவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், ஆனால் தற்போது அவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றே தெரிய வருகிறது.

அது நடந்தால் இரத்தக்களரியாகிவிடும்... அமெரிக்காவிற்கு கடும் மிரட்டல் விடுத்த நாடு

அது நடந்தால் இரத்தக்களரியாகிவிடும்... அமெரிக்காவிற்கு கடும் மிரட்டல் விடுத்த நாடு

ஞாயிற்றுக்கிழமையன்று, உலக சுகாதார அமைப்பு எபோலா தொற்றை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. இருப்பினும் பெருந்தொற்றாக அறிவிப்பதற்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றே உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆனால், சுகாதார மண்டலங்கள் முழுவதும் காணப்படும் அதிகப்படியான நோய்த்தொற்று விகிதம் மற்றும் அதிகரித்து வரும் நோயாளிகள், இறப்புகளின் எண்ணிக்கை ஆகியவை, மிகவும் பெரிய அளவிலான ஒரு நோய்ப்பரவல் ஏற்படக்கூடும் என்பதையே சுட்டிக்காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

எபோலாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்... வைரஸ் பாதித்த நாடுகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு | American Infected Us Limit Entry

மேலும், தற்போதைய நிலையில், இந்தத் திடீர் நோய்ப்பரவல் காரணமாக ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன; இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என டாக்டர் ஜீன் கசேயா தெரிவித்துள்ளார்.

இவர் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைமை இயக்குநராவார். இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் CDC, சட்டம் 42-ஐ அமுல்படுத்தியது.

இரண்டு முறை மட்டுமே

திங்கட்கிழமை முதல் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு, தொற்றுநோய்கள் பரவும் காலங்களில் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் ஒரு பொது சுகாதாரச் சட்டமாகும் இது.

1944 முதல் அமுலில் இருக்கும் இந்த சட்டமானது நவீன காலத்தில் இதுவரை இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறை, கோவிட் பெருந்தொற்றின் போது, ​​மார்ச் 2020 முதல் மே 2023 வரை பயன்படுத்தப்பட்டது.

எபோலாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்... வைரஸ் பாதித்த நாடுகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு | American Infected Us Limit Entry

எபோலா பரவல் காரணமாக திங்கட்கிழமை எடுக்கப்பட்ட நடவடிக்கை இரண்டாவது முறையாகும். திங்களன்று ஆப்பிரிக்க சிடிசி வெளியிட்ட தகவலின்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் 395 பேர்களுக்கு எபோலா பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிகிச்சை பலனின்றி இதுவரை 106 பேர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அமெரிக்கர் உட்பட, மத்திய ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை ஜேர்மனிக்கு மாற்றுவதற்கான பணிகளில் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US