சீனாவிலிருந்து குழந்தை ஒன்றை தத்தெடுத்த அமெரிக்க பெற்றோர்: 17 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த அதிர்ச்சி
சீனாவிலிருந்து குழந்தை ஒன்றை தத்தெடுத்த அமெரிக்க தம்பதியர், அந்த குழந்தை வளரும்போது தன் தாய்நாட்டையும் கலாச்சாரத்தையும் மிஸ் பண்ணக்கூடாது என உறுதி எடுத்துக்கொண்டனர்.
ஆகவே, அந்த குழந்தைக்கு சீன மொழி மற்றும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொடுத்தே வளர்த்துள்ளனர்.
அந்த பகுதியில் வாழும் சீன மக்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களுடன் குழந்தை பழகவும் வழிவகை செய்துகொடுத்துள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில், குழந்தை வளர்ந்து 17 வயது பையனாகிவிட்டான், அவனை இனி கல்லூரிக்கு அனுப்பவேண்டும்.
அப்போது அவனது பிறப்புச் சான்றிதழை கவனித்த அந்த பெற்றோருக்கு, அப்போதுதான் தாங்கள் செய்த பெரும் தவறு தெரியவந்துள்ளது.
அதாவது அந்த குழந்தையின் சொந்த பெற்றோரின் பெயர் Park மற்றும் Kim, அதாவது அவர்கள் சீனர்கள் அல்ல கொரிய நாட்டவர்கள்.
சீனக்குழந்தை என தவறாக நினைத்து, கொரிய குழந்தை ஒன்றை, சீன கலாச்சாரத்தில் அமெரிக்காவில் வளர்த்துவிட்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள் அந்த பெற்றோர்.