மரபுகளை மீறி மன்னரை தொட்ட அமெரிக்க ஜனாதிபதி: பொறுமையிழந்த மன்னர் சார்லஸ்
பிரித்தானியாவுக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ராஜ மரபுகளை மீறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரபுகளை மீறிய அமெரிக்க ஜனாதிபதி
பிரித்தானியாவுக்கு வருகை புரிந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், விண்ட்ஸர் மாளிகையில் மன்னர் சார்லசை சந்தித்தார்.
அப்போது ஜோ பைடன் ராஜ மரபுகளை மீறி மன்னர் சார்லசை முதுகில் தொட்டுள்ளார்.
AP
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், இது இரண்டு தனிநபர்களுக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அன்பையும் நட்பையும் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
பொறுமையிழந்த மன்னர் சார்லஸ்
ஜோ பைடன் தன் முதுகைத் தொட்டதை மன்னர் சார்லஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையென்றாலும், மற்றொரு விடயத்துக்காக அவர் பொறுமையிழந்தார்.
AP
அதாவது, புகழ்பெற்ற வேல்ஸ் பாதுகாவலர்களை சந்தித்தபோது, அவர்களில் ஒருவரிடம் ஜோ பைடன் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்ததால் பொறுமை இழந்துள்ளார் சார்லஸ்.
ஜோ பைடனை மெதுவாக திசை திருப்பி அங்கிருந்து மன்னர் அழைத்துச் செல்ல முயன்றபோதும், ஜோ பைடன் அதை கண்டுகொள்ளாததுபோல இருந்துவிட்டாராம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |