சார்லஸ் மன்னரை சந்திக்கும் முடிவுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
பிரித்தானியாவுக்கு வருகை தரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சார்லஸ் மன்னர் மற்றும் பிரதமர் ரிஷி சுனக்கை சந்திக்கவிருக்கிறார்.
பிரித்தானியாவுக்கு வருகை
குறித்த தகவலை அமெரிக்க வெள்ளைமாளிகை உறுதி செய்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி பால்டிக் பகுதிக்கு செல்வதற்கு முன் ஜூலை 9ம் திகதி பிரித்தானியாவுக்கு வருகைதர உள்ளார்.
@epa
இரண்டு நாட்கள் அவர் பிரித்தானியாவில் முக்கிய சந்திப்புகளை முன்னெடுப்பார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருகையின் போது, முடி சூட்டப்பட்ட பின்னர் சார்லஸ் மன்னரை முதன் முறையாக சந்திக்கவிருக்கிறார்.
முடிசூட்டு விழாவிற்கு ஜனாதிபதி பைடனின் மனைவி ஜில் பைடன் வருகை தந்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு ராணியார் எலிசபெத் காலமானபோது, இறுதிச்சடங்குகளில் ஜோ பைடன் பங்கேற்றிருந்தார்.
ஐந்து முறை சந்தித்து விவாதித்துள்ளனர்
பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை ஜோ பைடன் மற்றும் ரிஷி சுனக் ஐந்து முறை சந்தித்து விவாதித்துள்ளனர். எதிர்வரும் சந்திப்பானது ஆறாவது முறையாகும்.
@reuters
இந்த நிலையில், வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 9 முதல் 13 வரை பிரித்தானியா, லிதுவேனியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி பைடன் பயணம் செய்ய உள்ளார் எனவும்,
முதலில் லண்டனுக்கு செல்வார் எனவும், மன்னர் சார்லஸ் மற்றும் பிரதமர் சுனக் ஆகியோருடன் தனித்தனியாக சந்திப்பை முன்னெடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |